கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

Date:

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் இன்று (06) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட பின்னணி மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை தயாரிப்பதற்கும், இதனூடாகக் கனிய எண்ணெய் துறையில் பாரிய முதலீட்டை இலங்கையின் கனிய எண்ணெய் வள ஆய்விற்காக ஈர்ப்பதற்கும் புதிய சட்டமூலத்தினூடாக எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சின் காரியாலயம் தெரிவித்தது.

உரிய மற்றும் சுயாதீன கட்டுப்பாட்டு அதிகாரங்களுடன் இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதே இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...