களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்!

Date:

அளுத்கம -மத்துகம, அகலவத்த ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நாளைக் (06) காலை 8 மணிமுதல் அமுலாகும் வகையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பேருவளை, அளுத்கம, தர்காநகர், பெந்தர, களுவாமோதர, ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும்.

இதனை விட, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளிலும் 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் மறுநாள் பிற்பகல் 2 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...