உலகம் முழுவதிலும் 80,000 முதல் 180,000 வரையான சுகாதார பிரிவினர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
மேலும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையான தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலும், உலகம் முழுவதும் 135 மில்லியன் சுகாதார பிரிவினர் கடமையாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.