இன்று (15) முதல் கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் பரீட்சாத்திகளுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.,
அதன் படி கொழும்பு மாவட்டத்தில் 24,000 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள மாணவர்கள் தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.