சேவைக்குச்செல்ல நினைக்கும் ஆசிரியர்களை தடுப்பவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள அமைச்சர் தங்களிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பல ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் பணிக்குதிரும்பும் ஆசிரியர்களை அச்சுறுத்துபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது பணிப்புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.