நாளை மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளைய தினம் (11) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள், விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யோசனை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விலையை 100 ரூபாவினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கோரியுள்ளார்.இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, எரிவாயுவிற்கான உரிய விலை இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...

மாற்றுத்திறனாளியான புத்தளத்தின் பிரபல கலைஞர் சலீம் கான் அவர்களுக்குப் பாராட்டு: வடமேல் மாகாண பாடல் போட்டியில் சாதனை!

புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம்....

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...