பால்மா உற்பத்தியாளர்களின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை!

Date:

ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படும் தொகை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் சுசந்த குமார நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார் .

குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வெவ்வேறு பகுதிகளில் மாறுப்பட்ட விலைகளில் பால் கொள்வனவு செய்யப்படுவதாகவும், நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு மில்கோ மற்றும் பெல்வத்த ஆகிய பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுதாக நேற்று அறிவித்திருந்தது.

இதற்கமைய உள்நாட்டு பால் பால் உற்பத்தியாளர்களுக்காக செலுத்தப்படும் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...