அழிந்து வரும் அமேசான் காடுகள்!

Date:

பிரேசிலின் அமேசான் காடுகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் இதற்கு முன் இல்லாத அளவில் காடு அழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக அந் நாட்டின் அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் மட்டும் 877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசிலின் National Institute for Space Research கூறியுள்ளது.சென்ற ஆண்டு அக்டோபரில் அழிந்து போன காடுகளை விட இந்த ஆண்டு அக்டோபரில் 5 சதவீத அதிக காடுகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சுரங்கங்கள் மற்றும் விவசாயம் செய்வதால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 7 ஆயிரத்து 880 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகள் அழிந்துள்ளன.2019 இல் அதிபர் ஜேர் போல்ஸனாரோ ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான அமேசான் காடுகள் அழிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...