எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்!

Date:

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று அனைத்து நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை வெளியுறவுக் கொள்கையின் முதன்மை நோக்கமாகக் கருதுகின்றன.வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதலே பிரதானமாக நோக்குகிறது.இந்த யுகத்தில் பல நாடுகள் இன்று தாங்கள் நீண்ட காலமாக நம்பிய மற்றும் நம்பி வந்த அரசியல் கோட்பாடுகளுக்கு எதிராக பொருளாதார பலத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம்.

இது தான் இன்று நாம் காணும் யதார்த்தமாகும்.நேரு காலத்திலிருந்து நரசிம்மராவ் வரை நமது அண்டை நாடான இந்தியாவும் அந்தப் பழைய கோட்பாடுகளைப் பின்பற்றியது.இன்று இந்தியா போன்ற பல நாடுகளில்,அரசாங்க நிதியிலிருந்து மூலதனத்தை முதலீடு செய்வது,பெரிய தொழிற்சாலைகளை பராமரிப்பது,இன்று இந்தியா போன்ற பல நாடுகளில் பொருளாதாரம், போட்டி சார் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதன் மூலம் வெற்றியடைந்து வருவதைக் காண்கிறோம்.ஒருபுறம் நாட்டின் நலனையும், மறுபுறம் நாட்டின் நன்மதிப்பையும் நிலை நிறுத்த சரியான கொள்கையைக் கொண்ட வெளியுறவுக் கொள்கை அவசியமாகும். வெளிநாட்டுக் கொள்கை, குறுகிய அரசியல் அல்லது தனிப்பட்ட இலக்குகள் மற்றும் அர்ப்பணிப்புகளுக்குப் பதிலாக,தேசிய நலன்களைப் பின்பற்றுவதில் இலங்கைக்கு வழிகாட்டக்கூடிய நிபுனர் குழுக்கள்,சுயாதீனமான,சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் நமது நாட்டிற்குத் தேவையாகும்.

அதேபோல் சில அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிட் கேரியர் நுழைவு (Mid Career Entry)முறை உள்ளது என்பதை வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்த “பொருளாதாரத் துறையில் இராஜதந்திர உறவை” வலுப்படுத்த, திறமை, நிபுணத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மிட் கேரியர் நுழைவு முறையைத் தொடங்குவதை தனியார் துறை அல்லது பிற வளர்ச்சித் துறைகளில் ஊடாக பரிசீலிக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.

இச் சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டு குழு நிலை விவாதத்தின் போது எமது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரையை நினைவுபடுத்துகின்றேன்.நாங்கள் அணிசேரா மற்றும் காலத்திற்கு ஏற்ற வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளோம் என்று அவர் அப்போது வலியுறுத்தினார்.இன்று அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக கடமையில் இல்லை. அந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு சிறந்த வெளிநாட்டு சேவையை நாம் பெற்றுள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உலகில் எவருக்கும் அடிபனியாது,வெளிநாட்டு சேவையை சிறப்பாக செய்தவர்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது.காமினி கொரியா,பேர்லி அமரசிங்க,பிராட்மேன் வீரகோன் போன்ற பலரின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

எனவே, நமது வெளிநாட்டு சேவை திறன்களை மேம்படுத்த அதிக முதலீடு செய்ய வேண்டும்.வெளிநாட்டு சேவை ஒவ்வொரு காலகட்டத்திலும் குறுகிய அரசியல் மயமாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நாட்டின் நலனுக்காக, அந்த அரசியல் தலையீடுகளை மட்டுப்படுத்தி, அந்த வெளிநாட்டு சேவையை நாட்டிற்கான தனது பொறுப்புகளை சுதந்திரமாக நிறைவேற்றக்கூடிய வலுவான நிலைக்கு கொண்டு வருவதற்கான வலுவான தேவை இன்று உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சுதந்திர இலங்கையில் அண்மைக்காலம் வரை, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, சில சமயங்களில் சில சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஏறக்குறைய ஒட்டுமொத்தமாக, நமது நாடு ” அணிசேரா ” வெளியுறவு கொள்கை கொண்டிருந்தது என்பதில் நான் உடன்படுகிறேன்.இன்று அப்படியொரு நிலை இருக்கிறதா என்பது எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நமது வரலாற்று ரீதியான நண்பர்களாகும்.அந்த வரலாற்று நட்பை நாம் தொடர்ந்து பேண வேண்டும்.எமது நாட்டின் கௌரவத்தை பாதுகாத்த வன்னம் அந்த உறவுகளை எமது கடந்த கால தலைவர்கள் பேணி வந்தனர்.வல்லரசுகளின் முன் அவர்கள் மண்டியிடவே இல்லை. திரு.டட்லி சேனாநாயக்க, திரு,திருமதி.பண்டாரநாயக்க, திரு.ஜே.ஆர்.ஜயவர்தன,ரணசிங்க பிரேமதாச ஆகியோரை நான் நினைவு கூருகிறேன்.

எகிப்தின் இறையாண்மைக்காக, சிறிய நாடாக, அணிசேரா கொள்கையில்,சரியான விடயத்திற்காக,எகிப்து சுயஸ் கால்வாயை தேசியமயமாக்கிய போது, திரு.பண்டாரநாயக்கா வல்லரசுகளுக்கு எதிராக குரல் எழுப்பியதை நான் நினைவு கூர்கிறேன்.

ஆனால் இன்று மத்திய கிழக்கு தொடர்பான எமது நிர்வாகத்தின் நிலைப்பாடு ஒரு பிரச்சிணையாக உள்ளது.அத்துடன், ஜப்பான் ஏற்படுத்திய அழிவுகளுக்கு ஜப்பானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா போன்ற வல்லரசுகள் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராக, அன்றைய சேனநாயக்கா அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜே.ஆர்.ஜயவர்தன “நஹி வெரேன” என்ற அடியை நினைவு கூர்ந்து,இரண்டாம் உலகப் போருக்குப் பின்,சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

இன்றும் ஜப்பானிய மக்கள் தங்கள் நாட்டின் சார்பாக இலங்கை எடுத்த நிலைப்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்வதைக் காண்கிறோம்.ஆனால் இன்று நாம் ஜப்பானை எப்படி எதிர்கொள்கிறோம் என்று சிந்தியுங்கள்.இன்று ஜப்பானுடன் அந்த நெருக்கத்தை பேணி வந்திருக்கிறோமா?

இன்று உங்களின் வெளியுறவுக் கொள்கையின் காரணமாக எங்கள் பழைய நண்பர்களிடம் இருந்து நாம் விலகுவதைக் காண்கிறோம்.

வரலாற்றில் நமது தலைவர்கள் காட்டிய எடுத்துக்காட்டுகள், இடதுசாரி அல்லது வலது சாரியாக இருந்தாலும், நமது வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, இன்று நாம் செல்ல வேண்டிய பாதையை ஒரு கலங்கரை விளக்காக, விளக்கும் எடுத்துக்காட்டுகள் என்று நான் நம்புகிறேன்.

சர்வதேச மட்டத்தில் சுதந்திர இலங்கை வரலாற்றில் எமது தலைவர்கள் தமது நடத்தையின் மூலம் நாட்டுக்கு கொண்டு வந்த பெருமைக்கு பல உதாரணங்களை நாம் காண முடியும்.

ஒரு காலத்தில் சிறிய நாடாக இருந்த இந்திய-சீனப் பிரச்சணையைத் தீர்ப்பதில் திருமதி பண்டாரநாயக்கா மத்தியஸ்தராகச் செயல்பட்டது, நமது நாட்டுத் தலைவர்கள் அன்றைய சர்வதேச மட்டத்தில் கொண்டிருந்த மரியாதையைக் காட்டுகிறது.

சர்வதேச அரங்கில் கொள்கை ரீதியான நடத்தை காரணமாகவே அந்த மரியாதைக்கு தகுதியானராக திருமதி பண்டாரநாயக்க மாறினார்.

ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதி றோகல் றீகனைச் சந்தித்ததும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அவர் ஆற்றிய உரையும், ஒரு சிறிய நாட்டின் அரச தலைவர் என்ற முறையில் அவரது நடத்தையும் அவரது சமத்துவப் போக்கைப் பிரதிபலித்தது.

சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் தலைவரைச் சந்திக்கும் போது, அவருடன் படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிடுவதைத் தாண்டி நாட்டுக்கு மரியாதை அளிக்கும் நடத்தையை இந்தத் தலைவர்களிடம் காண்கிறோம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான சவால்கள் என்பன பற்றியே பிரதான கோஷங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று நமது நாட்டின் இறையாண்மை எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை.அந்த நிலைமையை முழு நாட்டிற்கும் நன்றாகவே தெரியும்.

நமது நாட்டில் உள்ள வல்லுநர்கள் நமது அறிவியல் ஆய்வகங்களில் பரிசோதனை நடத்தி உரம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்துள்ளனர்.ஒரு முறை அல்ல இரண்டு முறைகள் அவ்வாறு முடிவுகளை எடுத்தனர்.இன்று அந்தப் பரிசோதனைகளின் தீர்மானங்களையும்,எமது நீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட சவாலுக்குட்படுத்தும் வகையில்,இன்று மல எருக் கப்பல் நாட்டைச் சுற்றிவருவதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இதையும் தான்டி, நாட்டில் உள்ள அரச வங்கியொன்றை தூதரகம் ஒன்று சிதைவுக்குட்படுத்தியுள்ளமை ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவையெல்லாம் நம் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால்கள் அல்லவா?

இவையெல்லாம் நம் நாட்டின் பாதுகாப்புக்கு சவால்களாக இல்லையா?

ஆனால் நமது வெளியுறவு அமைச்சு இது குறித்து மௌனம் காக்கிறது. அரசாங்கம் அமைதியாக இருக்கிறது.இந்த நிலை ஒரு அவமானமாகும்.நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு பற்றி பேசி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நடந்து கொள்வது நாட்டுக்கே அவமானமாகவுள்ளது.

இன்று வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களில், பெரும் பகுதியினர்களாக உள்ளடங்கியுள்ளனர்.இவர்களை நமது நாட்டின் வளமாக கருத வேண்டும்.இந்த மக்களை நம் நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கத்திடம் ஒரு செயலாற்றுகை,வேலைத்திட்டம் அல்லது மூலோபாய திட்டம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் முழுப் பங்களிப்பைப் பெறுவதற்கு இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு சிறப்பு முன்னுரிமையுடன் செயல்படுகின்றன என்பதைப் பார்க்கிறோம்.

புலம்பெயர் மக்கள்,சிங்களம், தமிழ், முஸ்லிம் என வகைப்படுத்தப்படுவதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். இப்போது பிரிவினைப் போர் முடிந்துவிட்டது.இப்போது நாம் பிரிவினைவாத மனப்பான்மை மற்றும் எண்ணங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.

இலங்கையின் வரைபடத்தில் இந்த புலம்பெயர்ந்த இலங்கையர்களின் முழுமையான பங்களிப்பைப் பெறுவதற்கும், தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒட்டுமொத்த மூலோபாய வேலைத்திட்டத்தை அணுகுவதற்கும் மிக உயர்ந்த முன்னுரிமையை வழங்குமாறு நான் உங்களை வலியுறுத்த விரும்புகிறேன்.

நேரமின்மை காரணமாக இந்தத் துறையைப் பற்றி மேலும் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி, எமது தற்போதைய வெளிவிவகார அமைச்சர், “சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் அண்மைக்கால உறவுகள்” என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார்.அந்த நேரத்தில், உங்கள் அனுமதியுடன், விளக்கத்தை எதிர்பார்த்து, அவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில் திருப்தி அடைய முடியவில்லை. ஆனால் அந்த நேரத்தில், மேலும் விவாதத்திற்கு செல்வது பொருத்தமற்றது என்பதால், நான் உங்களை சங்கடப்படுத்தாமல் அமைதியாக இருந்தேன்.

அன்று நான் எழுப்பிய கேள்வியை அவர் மீண்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மீண்டும் படிக்க விரும்புகிறேன்.

இதற்கு அவர் அளித்த பதில் ஹன்ட்சார்டில் பதிவாகியுள்ளது.(ஹன்ட்சார்ட் பதிவு இணைப்பு)

பாருங்கள், இந்தப் பதில் பாலஸ்தீனத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை, “ஒரு நாட்டைக் குறிப்பிடும்போது, சில நேரங்களில் மற்ற நாடுகள் ஏன் நம் நாட்டைக் குறிப்பிடவில்லை என்று கேட்கின்றன.”

தென்னாப்பிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில் எங்கள் நாட்டை நீங்கள்தான் ஆண்டீர்கள், இந்த ஆட்சியாக நீங்கள் இருந்திருந்தால், “அந்த இனவெறி அரசாங்கம் எங்களைக் கேள்வி கேட்கும். எனவே,தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்டம் பற்றி எதுவும் கூறப்படவில்லை. நமது முற்போக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன இங்கு என்ன விளைகிறார் என்று வினவுகிறேன்? அப்போது அவர் கூறிய அந்த அணிசேரா கொள்கை என்ன? அன்றைய பலஸ்தீன ஒத்துழைப்புக் குழுவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்த கருத்துக்களுக்கு இன்று நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்.

நம் நாடும் பல தசாப்தங்களாக காலனித்துவத்துட்பட்ட நாடாக இருந்தது. இன்று உலகில் எஞ்சியிருக்கும் கடைசி காலனித்துவமாக பாலஸ்தீனம் தான் இருக்க வேண்டும்.

உலக மக்கள் சார் கருத்துக்களுடன் நின்று ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளுக்கு ஆதரவாக நிற்க உங்களுக்கு இன்று பலம் இல்லை.அணிசேரா கொள்கை,நட்புரீதியான கொள்கை, வார்த்தைகளில் மாத்திரமன்றி செயல்பாட்டிலும் இருக்க வேண்டும். நாமும் பல நூற்றாண்டுகளாக காலனித்துவத்தின் கீழ் இருந்தோம்.

அதே போல் இன்று காலனித்துவத்தின் கீழ் இருக்கும் ஒரு நாட்டு மக்கள் தங்கள் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக, தங்கள் உயிருக்காக, தங்கள் சுயமரியாதைக்காக உலக மக்கள் கனிப்புக்காக ஆதரிக்க வேண்டும் என்று கூக்குரலிடும்போது,அதற்கு நீங்கள் துணை நிற்காமல் ஓடிவிடுகிறீர்கள். மற்ற நாடுகள் புண்படும் என்று காரணம் கூறுகிறீர்கள்.அப்படியானால் நீங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பக்கத்தையே எடுத்துக் கொள்ளுகிறீர்கள்.நீங்கள் நவ காலனித்துவத்தையே ஆதரிக்கிறீர்கள்.

பலஸ்தீன மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்.அந்த உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.ஒரு நாட்டையோ அல்லது உலகையோ ஏமாற்றும் வெற்று வார்த்தைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று நமது மாண்புமிகு பிரதமரை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களின் வெளியுறவுக் கொள்கை தவறான வழியில் செல்வதால், இன்று நாம் உலகின் முன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.முன்னர் ஜெனிவாவில்,ஜெனிவாவுக்கான பாலஸ்தீனத் தூதுவர் நமது நாட்டிற்காக, மத்திய கிழக்கு மற்றும் ஐம்பது இஸ்லாமிய நாடுகள் எமக்கு உதவுவதற்கு பெரும் பங்கு வகித்தார்.

கஷ்டத்தில் நம்முடன் இருந்த பழைய நண்பர்களை மறந்துவிட்டு,வல்லரசுகளின் நலன் சார்ந்து செயல்படும் வெளியுறவுக் கொள்கைக்கு நீங்கள் சென்று விட்டீர்கள். தவறான வெளியுறவுக் கொள்கையால், ஒரு நாடாக நாம் எல்லா வகையிலும் அடிபடுகிறோம்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். ஜி.எஸ்.பி., வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் இந்த தவறான கொள்கைகளே காரணம் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...