மண்சரிவு எச்சரிக்கை காரணமாக நேற்று (10) தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு- கண்டி கீழ் கடுகன்னாவா வீதி மீண்டும் நாளை (12) காலை 9.00 மணி வரை மூடப்பட்டுள்ளது
ஏற்கனவே சில பகுதிகள் இன்று பிற்பகல் 1.00 மணி முதல் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்திருந்த வேளையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.