பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அபயராமய விஹாரையில் தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமய விஹாரையில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் (கிரி அம்மாதானய) வழங்கும் புண்ணிய நிகழ்வு  நடைபெற்றது.

நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்ததேரரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கமைய இந்த புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருடாந்தம் நடத்தப்படும் இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வானது இம்முறை 19ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டது.

சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வில் ஈடுபட்டார்.

இதன்போது கங்காராம விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அனுசாசனம் செய்தார்.

இந்நாட்டின் முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவம் மற்றும் துணிச்சலின் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடிந்தது.

இந்நாட்டை சுபீட்சமானதொரு எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்று தற்போது மற்றுமொரு எதிர்பார்ப்புள்ளது.

அதற்கான பலமும் தைரியமும் பிரதமருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆசீர்வாத பூஜை ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றது.

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்ததேரர் பிரதமரின் வாழ்க்கை பயணத்தின் நிழலாக இருந்ததுடன் அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும், இல்லாத போதிலும் இன்றும் என்றும்  இந்த புண்ணிய நிகழ்வை  ஆனந்த தேரரே நிகழ்த்துவார்.

இதேவேளை, இந்த ஆசீர்வாத பூஜையானது இந்நாட்டை நேசிக்கும் அனைவரது சார்பிலும் பிரதமருக்கு செய்யும் பூஜை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த பிறந்த நாள் மகிழ்ச்சியான மற்றும் வளமான பிறந்த நாளாக அமையவும், கடந்த ஆண்டுகளை விட எதிர்வரும் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்திப்பதாகவும்  வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜிதேரர் தெரிவித்தார்.

மேலும் கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள பிரதமரினால் விடுவிக்கப்பட்டதுடன் பிரதமரின் தலைமையில் நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...