மறைந்த எம்.ஐ.எம் முஹிதீன் அவர்களின் தேசிய பங்களிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

140 க்கும் மேற்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் வெளியிட்டுள்ள மர்ஹூம் எம் ஐ எம் முஹிதீன் பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் தேசிய அரசியல்,பிராந்திய அரசியல்,குடிசன பரம்பல்,குறிப்பாக காணி உறுதிகளை ஆவணப்படுத்தல்,காணி விவகார சிக்கல்களை தீர்த்தல் மற்றும் நாட்டில் அவ்வப்போது தோன்றும் நடைமுறை அரசியல் விவகாரங்களில் மிக உண்ணிப்பாக கவனம் சொலுத்தி உரிமைகளை பாதுகாப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கடந்த ஐந்து தசாப்பத காலமகாக காத்திரமான பின்னூட்டல்களை வழங்கியவராவார்.

1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முன்னால் அமைச்சர் மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்களுடன் இனைந்து,

வடகிழக்குப் போரின் போது விடுதலைப் புலிகள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சென்னை சென்ற குழுவில் மர்ஹூம் மொஹிதீனும் ஒருவராக அங்கத்துவம் பெற்று இருந்தார்.முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபக செயலாளரும், இலங்கை முஸ்லிம் ஆவண மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், ஆய்வாளரும், முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றாசிரியருமான பன்முக ஆளுமையான இவரின் இழப்பு, பல் வேறு இளம் ஆய்வாளர்களின் தேவைகளை விட்டுச் சென்றுள்ளது.

1994,1995 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழத்தை உருவாக்கும் செயலணியில் அங்கத்தவராக பனியாற்றினார்.

முஸ்லிம் சமூகத்தின் முதன்மையான சிவில் அமைப்புகளில் ஒன்றான அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் இணைச் செயலாளராக மர்ஹூம் டொக்டர் கலீல் காலத்தில் பனியாற்றியதோடு எனது தந்தை மர்ஹூம் எம் ஏ பாக்கிர் மாக்காருடன் நெருங்கி செயற்பட்டார்.தேர்தல் காலங்களில் பல தேர்தல் சீர்திருத்தங்களின் போது எனது தந்தைக்கு பிரதான ஆலோசகராக செயற்பட்டமை எனக்கு நினைவிற்கு வருகிறது.

அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை வழங்க இறைவன் துணை புரியட்டும்.இழப்பினால் துயர் கொண்டுள்ள மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலை வழங்குவானாக.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...