யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்!

Date:

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று (08) இரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சங்கானை பிரதேச செயலகப் பிரிவின் J/179 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 4 குடும்பத்தினர் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 200 மி.மீ அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விடாது பெய்த அடை மழையினால் பாடசாலை இன்று (09) மூடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட...

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...