வெலிசர விபத்தில் காயமடைந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

Date:

கடந்த 4 ஆம் திகதி வெலிசர , மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.17 வயதுடைய இரத்தினபுரியைச் சேர்ந்த இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞனின் உறவினர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.16 வயதுடைய சிறுவன் ஒருவனாலே இந்த விபத்து இடம்பெற்றது.விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய இளைஞன் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...