கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைக்காக பகிரங்க கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களினால் தாக்கப்பட்டார்.தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வரும் மலாலா தொடர்ந்து பெண் குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார்.மேலும் பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில் தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் நடாத்தி வருகின்றார்.