அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர், இன்று 22 பிரதமருடன் சந்திப்பு

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் இன்று 22 அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணத்துக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பிரதமருடைய சேவைகளைப் பாராட்டி விசேட நினைவுச்சின்னமொன்று ஆன்மீகத் தலைவரினால் வளங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவராக பதவி ஏற்று இலங்கைக்கு முதல் தடவையாக தனது உத்துயோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டதை முன்னிட்டு பிரதமரினால் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச்சின்னமொன்றை வழங்கி கௌரவித்தடுடன் பிரதமர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும்,பிரதமரின் பெளத்த மத மற்றும் கலாசார விவகார இணைப்பாளரான கலாநிதி அக்ரஹரே கஸ்ஸப்ப நாயக தேரர், பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர்,
ஏற்பாட்டுக்குழு தலைவர் அல்-ஹாஜ் மொஹிதீன் காதர்,மற்றும் ஏற்பாட்டுக்குழு  ஒருங்கினைப்பாளர் அல்-ஹாஜ் முய்னுதீன் பின் மொஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது கலந்து கொண்டனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...