ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில்,ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்குசொந்தமான, சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை, அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. கருவூலத்தில் நிதியின்றி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலும், அரசு அதிகாரிகளுக்கு பல மாதங்களாக சம்பளம் தரமுடியாத நிலை இருப்பதாகவும், அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதே நிலை நீடித்தால், மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிவிடும் என்றும், அமீர்கான் முத்தக்கி குறிப்பிட்டுள்ளார்.