வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் உதவிப் பொருட்கள் அடங்கிய வாகனங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா அனுப்பும் கோதுமை, தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்கத் தயார் என்று தாலிபன் அரசு தெரிவித்த நிலையில் சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டொன் பொருட்கள் ஆப்கானுக்கு அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த சரக்குகள் பாகிஸ்தானின் வீதி வழியாக செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில் இதனை ஏற்றுக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிலையில் நேற்று(24) அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு தகவல் அனுப்பியுள்ளதாக ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.