இங்கிலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்தில் “அர்வன்” என பெயரிடப்பட்ட புயல் நேற்று (27) கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்றும் பனிப்புயலும் சேர்ந்து தாக்கியதால் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது, பெரிய லாரி ஒன்றும் விழுந்துள்ளது.
புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மரம் விழுந்ததிலும், பனியில் சிக்கியும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மின்சாரம் தடைபட்டதால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருளில் தவிக்கின்றனர். சாலைகளில் விழுந்த கிடைக்கும் மரங்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.