இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் க்லென் ப்ளிப்ஸ் 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 2/25 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

154 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் கே.எல் ராகுல் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சவுத்தி 3/16 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

 

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...