இன்றைய வானிலை அறிக்கை!

Date:

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இப் பிரதேசங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் வீசக் கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

ரஷ்யாவில் LGBT விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடும் சிறைத்தண்டனை: முதல்முறை கடுமையான நடவடிக்கை!

ரஷ்யாவில்   (LGBT) இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்கில்,...