நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தவகையில் நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம்