இரணைமடு 4 வான் கதவுகள் திறப்பு!

Date:

வடமாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களினால் திறந்து விடப்பட்டுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குலத்திற்கான நீரின் வரத்து அதிகரிக்க காரணத்தினால் இன்று (28.11.2021) அதிகாலை 6 மணி அளவில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டது மூன்றாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாகவும், நான்காம் இலக்க வான்கதவு 12 அங்குலம் ஆகும், ஐந்தாம் இலக்க வான்கதவு 12 அங்குலமாகவும், ஆறாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாக திறக்கப்பட்டுள்ளது மொத்தமாக 3 அடியாக இரணைமடு குளத்தின் நீர் வெளியேறுகிறது.

இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இரணைமடு குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையினால் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டது இரணைமடு குளத்தின் வெளியேறுகின்ற நீரால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...