‘இலங்கை மற்றும் மாலைதீவின் பொருளாதார மீட்சிக்கு உதவுங்கள்’-மாலைதீவு ஜனாதிபதி

Date:

சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த மாலைதீவின் பொருளாதாரம் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கான பாதையில் சென்று கொண்டிருப்பதாக மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சொலிஹ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொவிட் சவால்களை அனைத்தையும் மீறி, இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும், இலங்கை மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளுக்கு உலகளாவிய நிதி ஆதாரங்களை மேலும் அணுகுவது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த மாலைதீவு ஜனாதிபதி ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான கடன் முயற்சிகளுக்கு உதவுவதாகவும், மாலைத்தீவு மற்றும் இலங்கை போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் உதவுமாறு சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரமும் உயர்ந்து வரும் நிலையில், வாழ்க்கைச் செலவு, பல்வே அத்தியவசிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது மற்றும் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறை ஆகியவற்றுடன் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்துடன் மாலைதீவு தொடர்ந்து அர்த்தமுள்ள வகையில் ஈடுபடும் என்றும் மாலைத்தீவு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மாலைத்தீவு இலங்கை மற்றும் இந்தியாவுடன் முத்தரப்பு உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான முயற்சிகள் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றில் ஒத்துழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு ‘நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் உலகில் வாழ்கிறோம், உலகில் பாதியில் நடக்கும் ஒன்று நமது பிராந்தியத்தில் பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். நாம் எதிர்கொள்ளும் வகையான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து உருவாகி, அவற்றின் அணுகுமுறைகளில் மிகவும் வெட்கக்கேடானதாகவும் தீயதாகவும் மாறுகின்றன.

எமது புலனாய்வுத் திறன்களை அதிகரிப்பதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்வதில் மாலைத்தீவுகள் எங்களுடைய சொந்த ஆற்றலைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றன’ என்றும் மாலைத்தீவு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...