இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழிருக்கின்ற பலஸ்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்ச்சி 2021-11-28 நாளை ஞாயிறு காலை 10 மணி முதல் Facebook மற்றும் YouTube மூலமாக நேரடி ஒலி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
இந் நிகழ்ச்சியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன தலைமையகத்தில் கொவிட் 19. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க சம்மேளன தலைவர் சகோதரர் லுக்மான் சஹாப்தீன் தலைமையில், பிரதம அதிதிகளின் பங்கு பற்றுதலுடன் இடம்பெறும்.
இந் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பலஸ்தீன இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர். மேன்மை தங்கிய Dr. ஸுஹைர் ஹம்தல்லாஹ் தார் ஸய்த். கௌரவ அதிதியாக, பாராளுமன்ற உறுப்பினர், ( பலஸ்தீன் – இலங்கை பாராளுமன்ற நட்புரவுச் சங்கத் தலைவர்) கௌரவ Dr. ஸுரேஷ் ராகவன் மற்றும் Dr.குஸும் விஜேதிலக ( பலஸ்தீன- இஸ்ரவேல் பிரச்சினை சம்பந்தமான முன்னணி சர்வதேச ஆய்வாளர்) இவர்களோடு இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
பின்வரும் link ஐ click செய்வதன் மூலம் நீங்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/110792544761300/posts/113964561110765/?d=n