ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுமா? | நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவு

Date:

கொழும்பில் நாளை(16) ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசார்  முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிசார் வாழைத்தோட்டம்  நீதிமன்றிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

எனினும், குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(15) நிராகரித்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு 5 நீதிமன்றங்கள் தடை விதித்தன

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.

அதன்படி புதுக்கடை 5 ஆம் இலக்கம், மஹர 1 ஆம் மற்றும் 2 ஆம் இலக்கங்கள், கடுவலை மற்றும் மஹரகம் ஆகிய நீதிமன்றங்களினால் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...