ஆப்கான் தலைநகரான காபூலில் குருதுவாரா கர்த்தே பர்வான் எனுமிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு இன்று (26)இடம்பெற்றுள்ளது.இந்த குண்டு வெடிப்பில் உயிரிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை ,சீக்கியர்களை குறிவைத்து நடைபெற்ற இத் தாக்குதலால் பெரும் குழப்பமும் பதற்றமும் நீடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் குருதுவாராவில் அடைக்கலம் புகுந்து அச்சத்துடன் அடைந்துகிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அப் பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்து பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர். அண்மையில் அடுத்தடுத்து நிகழும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காபூலில் பாதுகாப்பு குறித்த கேள்வியை உலக நாடுகள் மத்தியில் எழுப்பியுள்ளன.