கிண்ணியாவில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியாவில் இன்றைய தினம் (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.அதற்காக வர்த்தக நிலையங்களை மூடி, வீடுகளிலும்,பொது இடங்களிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றித துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புகள் பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் (23) திருகோணமலை- குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உள்ளடங்குகின்றனர்.இச் சம்பவம் குறித்து மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை தேடி மும்முரமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த 3 பேரையும் நேற்று (24) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.