கிண்ணியா பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி!

Date:

திருகோணமலை -கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலம் மூழ்கியுள்ள சம்பவம் இன்று (23)காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 6 ஆகஉயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகக் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காகஅனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்வதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...