இந்த நாட்டின் பல்லின சமூகங்களிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் CIS நிறுவனம் சகோதர மதத்தவர்களான சிங்களம், தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான முஸ்லிம்களின் மஸ்ஜித்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்து “Open masjidh” நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றது.கடந்த 25 ஆம் திகதி புதன்கிழமை இந் நிகழ்ச்சி கொள்ளுப்பிட்டிய ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு “மனித நேயத் தூதர் (ஸல்) அவர்கள்” , ” அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” என்ற நூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.இந் நூல்களில் மொத்தம் 80 பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.அனைத்தும் சிங்கள மொழியிலான புத்தகங்களாகும்.