மண்சரிவு எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று நண்பகல் 12.00 மணி முதல் வீதியின் ஒரு பகுதி இவ்வாறு திறக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான பஹல கடுகன்னாவ வீதி கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்டது.இதனால் குறித்த வீதியில் சென்ற சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.