(அதீக் அமீனுத்தீன்)
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக தமது தொழில்களை இழந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலையிலுள்ள வறிய மக்களுக்கு உதவும் வகையில் உலர் உணவு பொருட்கள் வழங்கும் செயற்திட்டத்திற்காக மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி நிருவாக சபையினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையிலே கொழும்பில் உள்ள FEEDLANKA நிறுவனத்தின் அனுசரணையில் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உணவுப் பொதிகள் நமது மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் மாஹோ பிரதேசத்தில் உள்ள தேவையுடைய குடும்பங்கள்தெரிவு செய்யப்பட்டு தலா ஒருவருக்கு 5000/= ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப் பொதிகள் நேற்று (06.11.2021) சனிக்கிழமை மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி வளாகத்தில் வைத்து அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமல்லாது கஷ்டத்தில் இருக்கும் தேவையுடைய அனைத்து இன மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நன்கொடைகளை வழங்கிய கொழும்பு FEEDLANKA நிறுவனத்திற்கும் அதற்கு துணையாக நின்று நிகழ்வை ஏற்பாடு செய்த மாஹோ மஸ்ஜித் ஆயிஷா ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.