சிறுவர்கள் வீடுகளுக்குள்ளயே அடைபட்டு இருப்பதால் சில மனநோய் நிலைமைகளுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீடுகளுக்குள் சிறுவர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பல்வேறு மனநோய்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைக்கு அனுப்புவது கட்டாயமென அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.