தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் பஹலவெவ பகுதியில் பஸ் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் பஸ்ஸிலிருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழை பெய்து வருகின்றது. இதனால் குறித்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று வயல் நிலத்துக்குள் குடை சாய்ந்துள்ளதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.