ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்துள்ள நிலையில் , தாலிபான் ஆட்சியில் அமர்ந்த பின்னர் காபூலில் முதல்முறையாக கால்பந்து தொடர் நடத்தப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாலிபான் அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து நவம்பர் 27 ஆம் ஆப்கான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்வதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதேவேளை தாலிபான் ஆட்சிக்கு பின் காபூலில் வருடாந்த கால்பந்து தொடர் மீண்டும் நடத்தப்பட்ட நிலையில் பெரும் திரளான இரசிகர்கள் கலந்து கொண்டனர்.