அமெரிக்காவில் தீபாவளி தினத்தை விடுமுறையாக அறிவிக்குமாறு கோரி அந் நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார்.கலாசாரம், வரலாறு மற்றும் சமய ரீதியாக தீபாவளியின் முக்கியத்துவம் குறித்து மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கரோலின் மலோனி என்ற காங்கிரஸ் பெண் எம்.பி தலைமையிலான குழு இந்த மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.