நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம்; பாதிக்கப்பட்டோர் மொத்த விபரம்!

Date:

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 16,71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , நுவரெலியா, மாத்தளை , பதுளை, களுத்துறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் உயிரிழப்புக்கள்.

புத்தளம்; புத்தளத்தில் முந்தல் , மதுரங்குளி பிரதேசங்களில் உள்ள 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துரிதமாக நீர் நிரம்பியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு: கொழும்பில் கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொத்தட்டுவ புதிய நகரில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்றின் அறை முற்றாக சேதமடைந்துள்ளது.புத்தகமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 42 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

கேகாலை: கேகாலையில் அறநாயக்க அப்பெல்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்று சேதமடைந்துள்ளது.கேகாலை ரம்புக்கனை, புவக்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

கம்பஹா; கம்பஹா பியகம ,யட்டவத்த கிராம செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல ,கம்பஹா ,ஜாஎல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

களுத்துறை: களுத்துறை மாவட்டத்தின் களுகங்கை ,புளத்சிங்கல,  தொடங்கொட உட்பட தாழ் நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

 

பாதிக்கப்பட்டுள்ள வீதிகள்

இறம்புக்கனை , மாவனெல்லை வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.புத்தளம், கொழும்பு வீதியின் பாலாவி பிரதேசத்திலும் குருநாகல் , புத்தளம் வீதியின் அரலியஉயன இரண்டாம் கட்டைக் கருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.மஹா ஓயா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.வரகாபொல பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளைஞன் படகோட்டச் சென்றமையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

எச்சரிக்கை பிரதேசங்கள்

கேகாலை, கம்பஹா , கொழும்பு மாவட்டங்களில், களனி கங்கையை அண்டிய தெஹியோவிட்ட சீதாவக்க , தோம்பே , பியகம, கொலன்னவா , கொழும்பு , வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ்நிலங்களிலும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, குருநாகல் மாவட்டங்களின் மஹா ஓயாவை அண்டிய கிரியுல்ல ,அளவ்வ, மீரிகம ,பன்னல , வென்னப்புவ , நீர்கொழும்பு , கட்டான ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவிகளிலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை நீர்ப்பாசனத் திணைக்களம் , முகாமைத்துவ மத்திய நிலையத்தினாலும் வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கையை மக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

 

Popular

More like this
Related

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...

பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

Aplikacja Kasyno Na Prawdziwe Pieniądze, Aplikacje Hazardowe 2025

10 Najlepszych Gier Paypal, Które Szybko Wypłacają Prawdziwe PieniądzeContentTop-10...

Best Online Casinos Australia 2025 Trusted & Safe Au Sites

Unveiling Secrets Regarding Thriving In Online Casino Online!"ContentSuper Slots...