நாட்டில் சில நாட்களாக பரவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு எனும் வதந்தி குறித்து நாட்டுக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கையிருப்பில் இருப்பதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 36 ஆயிரம் மெட்ரிக் டொன் பெற்றோல் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.