நாட்டில் மேலும் 734 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நாட்டில் இன்றைய தினம் ( 25) மேலும் 205 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இன்று 734 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 559,810 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,232 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 528,400ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...