நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவற்றில் கண்டி, மாத்தளை , குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்சரிவு ஏற்படும் அபாய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களை கோரியுள்ளது.