நாளை சாய்ந்தமருதில் எழுத்தாளர் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா!

Date:

முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்காளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது எழுதிய ‘எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நாளை (27) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.நிகழ்வில், விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரிம்சான் கலந்து கொள்வதோடு, நூலின் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் இக்ரா யு. சத்தார் பெற்றுக் கொள்கிறார்.

சிறப்பு பிரதிநிதிகளை ஐக்கிய காங்கிரஸின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மற்றும் அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.இந்நிகழ்வில் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...