தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இப் பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 41,000 ஆக வழங்கப்பட உள்ளது.தற்போது அவர்கள் மாதாந்தம் ரூ. 20,000 பெறுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)