பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே பதவி விலகிய சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன்!

Date:

பட்ஜெட் தோல்வி மற்றும் கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சுவீடன் நாடாளுமன்றத்தில் மாக்டெலனா. ஆண்டர்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கூட்டணி கட்சியான கிரீன்ஸ் பார்ட்டி வலது சாரி கொள்கைகள் உடைய எதிர்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சியுடன் இணைந்து நிராகரித்தது.

இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த மாக்டெலனா ஆண்டர்சன், ஒற்றை தலைமை கொண்ட ஆட்சியை வழிநடத்த விரும்புவதாக தெரிவித்தார். பிரதமரின் விலகல் முடிவை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என சபாநாயகர் Andreas Norlen தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/24/swedens-first-female-prime-minister-resigns-hours-later&ved=2ahUKEwjVteTa3rL0AhWfTmwGHSUjAooQFnoECEgQAQ&usg=AOvVaw1TXfKxzPpG_hgqvyyRukRB&ampcf=1

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...