“மத்யூ ஹேடன் எனது சிறந்த நண்பன் எனினும் மூன்று மணித்தியாலத்திற்கு எங்களுடைய நட்பை துண்டிக்க போகிறேன்”- அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்.மொத்தமாக நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதோடு ,இதில் ஒரே ஒரு ஆசிய அணியாக பாகிஸ்தான் இடம்பிடித்துள்ளது.முதலாவது அரையிறுதி போட்டி நேற்று (10) அபுதாபியில் இடம்பெற்றது.இதில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.இப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (11) டுபாயில் இடம்பெறவுள்ளது.இப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான மெதிவ் ஹேடன் மற்றும் அவுஸ்திரேலியா அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கரும் முன்னைய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜாம்பவான்களாகும்.இப்போது எதிரெதிர் அணிகளில் இருந்து எதிரிகளாகும்.இது இவ்வாறு இருக்க ஜஸ்டின் லங்கர் இது குறித்து விநோதமான கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.அதாவது,

“நானும் ,மெத்யூவும் சிறந்த நண்பர்கள் எனினும் மூன்று மணித்தியாலத்திற்கு எங்களுடைய நட்பை துண்டித்துக் கொள்கின்றோம் என”தெரிவித்துள்ளார்.

இத் தொடரில் அவுஸ்திரேலியா அணி குழு 1 இல் இடம்பெற்றிருந்தது.அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்திடம் மாத்திரமே சூப்பர் 12 சுற்றில் தோல்வியை தழுவியிருந்தது.

கடந்த கால அவுஸ்திரேலியாவின் ஆதிக்க அணியின் ஜாம்பவான்களாக மெத்யூ ஹேடன் மற்றும் ஜஸ்டின் லங்கர் ஆகியோர் இருந்துள்ளனர்.இந்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியை பார்த்து பயப்படாத வேகப்பந்து வீச்சாளர்களே இல்லை என்று கூறலாம்.ஒரு காலத்தில் எவ்வாறு மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் மூன்று வீரர்களாக களமிறங்கிய ரோய் பிரெட்ரிக்ஸ், கார்டன் கிரீன்ட்ஜ், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் எதிர் தரப்பு பந்து வீச்சாளர்களை நடுங்கச் செய்தார்களோ அவ்வாறே தான் லங்கர் மற்றும் ஹேடன் ஜோடிகள் அவுஸ்திரேலியாவின் பலம்மிக்க துடுப்பாட்ட ஜோடிகளாக இருந்துள்ளனர்.

முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடிகள் நாளை எதிரெதிர் அணியில் அமர்ந்திருப்பதை காண்பதற்கு ஆர்வமாக இருப்பதாக மூத்த கிரிக்கெட் இரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹேடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , நாங்கள் இத் தொடரின் போது குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்கிறோம்.எனினும் பெரிதளவில் ஆலோசனைகள் செய்வதில்லை .இருவருமே பணியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம்.நான் ஹேடனை நீண்டகாலம் சந்திக்கவில்லை எனவே இங்கு அவரை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.கிரிக்கெட் எங்களுடைய உறவின் பாலமாக இருக்கிறது எனினும் பாகிஸ்தானுடனான அரையிறுதி ஆட்டத்தின் போது எங்களுடைய நட்பை துண்டித்து விடுவேன் என்று ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று(11) வெற்றி பெறுகின்ற அணி எதிர்வரும் (14) ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

அப்ரா அன்ஸார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...