ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வருகின்றது.சூப்பர் 12 சுற்று நிறைவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது.சூப்பர் 12 இல் குழு 2 இல் இடம்பெற்ற இந்தியா அணி ஆரம்ப சுற்றுடனே தொடரிலிருந்து வெளியேறியது.இது இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.இந்தியா அணி தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் படு தோல்வியடைந்திருந்தது.இத் தோல்விகள் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை கேள்விக்குறியாக்கியது.எனினும் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்திடம் வெற்றியடையும் சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு இருந்தது எனினும் இப் போட்டியில் ஆப்கான் அணி தோல்வியடைந்தது.இப் போட்டியை ஆப்கான் நியூசிலாந்து இரசிகர்களை விட இந்திய இரசிகர்களே எதிர்பார்த்து காத்திருந்தனர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இப் போட்டி அபுதாபி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.போட்டி ஆரம்பிக்க சில நேரங்களுக்கு முன்னர் கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பொருப்பாளர் மோகான் சிங் உயிரிழந்திருந்தார்.அவர் தனது அறையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தியாவின் உத்தரகாண்ட மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான மோகான் சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்கு முன்பு மொஹாலியிலுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் உறுப்பினராக கடமையாற்றினார்.முக்கிய பிட்சரான தல்ஜித் சிங்கின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார்.1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மைதானத்தில் பிட்சராக பயிற்சி பெற்ற பின்பு 15 ஆண்டுகள் அபுதாபி மைதானத்தில் விளையாடியுள்ளதாகவும் அந்த நேரத்தில் அடைந்த வெற்றியில் அவரும் முகக்கிய பங்குதாரராகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியான நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியின் ஆடுகளத்தை தயார் செய்யும் பொறுப்பை மோகன் சிங் செய்து வந்தார்.
இந்தியாவுக்கு மிக முக்கியமான போட்டி என்பதால் ஆப்கானை வெல்ல வைப்பதற்காக நியூசிலாந்திற்கு பாதகமான ஆடுகளத்தை அமைக்குமாறு மோகன் சிங்கிற்கு எந்த தரப்பினராலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது ஒரு தற்கொலையா என்பதை காவல்துறையினரின் முழுமையான விசாரணைகளின் பின்னரே உறுதிப்படுத்துவார்கள் என போட்டி ஏற்பாட்டளர்களுடன் தொடர்புடைய முத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.அபுதாபி கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை மோகன் சிங்கின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.எனினும் இதுவரையில் மரணத்துக்கான காரணத்தை வெளியிடவில்லை.
இது குறித்து இந்திய ஊடகங்கள் வாய் மூடியுள்ளமை மேலும் வியப்பையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.அத்தோடு இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) இனால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தினாலே மோகான் சிங் இவ்வாறான முடிவை எடுத்திருப்பதாக பலர் சந்தேகிக்கின்றனர் . எனினும் முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையை அறிந்து கொள்ள முடியும்.அதுவரையில் இது புரியாத புதிராகவே உள்ளது.
அப்ரா அன்ஸார்.