இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்றது.இப் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 191 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.இதனையடுத்து 348 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னனியில் இருக்கிறது.