மூன்றாவது நாளாக அருட் தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

Date:

வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (22) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது தடவையாக முன்னிலையான அருட்தந்தை சிறில் காமினியிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.இதற்கமையவே இந்த வாக்குமூலம் அருட்தந்தை சிறில் காமினியிடம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...