மேலும் 17 கொவிட் மரணங்கள் பதிவு; 538 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நாட்டில் நேற்று (08) 17 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,192 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொவிட் தொற்று உறுதியான மேலும் 538 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 546,473 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 10,397 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை கொவிட் தொற்றால் 6,689 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.இதன்படி கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...