சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் கொழும்பில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்ற (எஃப்எஸ்எல்) நடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோப்பை கால் பந்தாட்ட போட்டியில் இலங்கை 2-1 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது .
சில நாட்களுக்கு முன்னர் மாலைத்தீவுக்கு எதிராக இலங்கை சார்பில் இரண்டாவது பாதியில் அசத்தலான நான்கு கோல்களை அடித்த அஹமட் வசீம் ரஸீக், பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு கோல்களையும் அடித்ததன் மூலம் மீண்டும் நட்சத்திரமாக பிரகாசிக்கிறார்.
19ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணி, சீஷெல்ஸ் அணியுடன் மோத உள்ளதுடன் பிரதமர் ‘மஹிந்த ராஜபக்ச கிண்ணம் மற்றும் 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை அணி தனதாக்கிக் கொள்ளுமா என்பது அனைத்து இரசிகர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
https://www.facebook.com/106280117868758/posts/406352384528195/