2021 ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் அரையிறுதி ஆட்டத்தோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது.அரையிறுதியில் தோற்றாலும் இத் தொடரில் சிறப்பாக விளையாடிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.இதற்கு அணித் தலைவர் பாபர் அசாமின் மிகச் சிறந்த வழிகாட்டலே என மூத்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.இத் தொடரிலிருந்து வெளியேறினாலும் பலராலும் புகழப்படும் ஒரு அணியாகவும் ,அணித் தலைவராகவும் காணப்படுவதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.இந் நிலையில் அரையிறுதி ஆட்டத்தின் பின்பு பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஊடகங்களிடம் பேசிய போது ,அப்போது விராட் கோலி , பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர் என நீங்கள் நினைக்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் இருவரும் சமமானவர்கள் கிடையாது.33 வயதான கோலியுடன் பாபரை ஒப்பிடும்போது அவருக்கு 27 வயது இளமையாக இருக்கிறார்.பாபர் அணியை வழிநடத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது.அவர் மிகவும் நிலையானவர்.அவர் ஆடம்பரத்தை தவிர்க்கக் கூடியவர்.பாபர் பெரும்பாலான நேரங்களில் மிகவும் அமைதியாக இருக்கிறார்.அவரது தலைமைத்துவத்திலும் , துடுப்பாட்டத்திலும் நோக்கமாக இருக்கக் கூடியவர்.அதே நேரம் விராட் மிகவும் உணர்ச்சிவசப்படுவர்.களத்தில் மிகவும் ஆராவாரமாக இருப்பார்.பாபர் விராட் கோலியை போல் இன்னும் சாதிக்கவில்லை.ஆனால் பாபர் தலைவராகவும், இளமையாகவும் இருக்கிறார்.நான் பார்த்ததில் அவர் கற்றுக்கொள்கிறார்.அவர் விரைவாக கற்றுக் கொள்பவர்” என அவர் கூறினார்.
விராட் கோலி யின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்.
இருபது ஓவர் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் தற்போது 7வது இடத்தில் உள்ளார். 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் 34 பந்தில் 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.இதில் 32வது ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போது அவர் இருபது ஓவர் சர்வதேச போட்டியில் 2,500 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 62 இன்னிங்சில் அவர் இந்த ஓட்டங்களை பெற்றுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார். விராட் கோலி 68 இன்னிங்சில் 2,500 ஓட்டங்களை பெற்றிருந்தார். தற்போது இந்த ஓட்டங் களை எடுத்த பின்னர் அதிவேக ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் நிலைநாட்டியுள்ளார் .
பாபர் அசாம் 62 இன்னிங்சில் 2,507 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 48.21 ஆகும். ஒரு சதமும், 24 அரைச்சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 122 ஓட் டங்கள் குவித்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் அவர் தற்போது 7வது இடத் தில் உள்ளார்.விராட் கோலி 3,227 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பாபர் ஆசம் இந்த உலக கிண்ணத்தில் 300க்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்ரா அன்ஸார்.